LATEST NEWS
சாலையோர மக்களுக்கு நட்சத்திர ஹோட்டலில் உணவு பரிமாறி மகிழ்ந்த விஜய் ஆண்டனி… வெளியான புகைப்படங்கள்…!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி.
இவரின் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் இவரது திரை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
அவரைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இவர் கொடுத்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனிடையே விஜய் ஆண்டனி தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி, மழை பிடிக்காத மனிதன், கொலை ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
அதில் பல திரைப்படங்களும் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கும் ரத்தம் என்ற திரைப்படத்தில் விஜய் ஆண்டனி தற்போது நடித்து வருகிறார்.
இந்தத் திரைப்படத்தில் மகிமா நம்பியார்,நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் உள்ளிட்ட மூன்று பேரும் கதாநாயகியாக நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் விஜய் ஆண்டனி கடந்த 2006 ஆம் ஆண்டு பாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு அழகிய மகளும் உள்ளார்.
இந்நிலையில் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 வெற்றியை கொண்டாடும் விதமாக மிகப்பெரிய ஹோட்டலில் குழந்தைகள் உட்பட சாலையோர மக்களுக்கு விருந்து வைத்து மகிழ்ந்துள்ளார். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
