LATEST NEWS
வீட்டில் மனைவியுடன் ஒன்றாக தோசை சுட்டு சாப்பிடும் விஜய்…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப கதையை மையமாகக் கொண்டிருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தளபதி 67 திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கம் இந்த திரைப்படத்திற்கு லியோ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் பல வருடங்களுக்குப் பிறகு விஜயுடன் திரிஷா இணைந்துள்ளார். படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விஜயின் அரிய வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அவ்வகையில் தற்போது சில வருடங்களுக்கு முன்பு விஜய் தனது வீட்டில் மனைவி சங்கீதாவுடன் அமர்ந்து தோசை சுட்டு சாப்பிட்ட வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
— Roвιɴ Roвerт (@PeaceBrwVJ) March 26, 2023
