பிரபல கிரிக்கெட் வீரரை கரம் பிடித்த தலைவாசல் விஜயின் மகள்.. நேரில் சென்று வாழ்த்திய விஜய் சேதுபதி.. வைரலாகும் புகைப்படங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல கிரிக்கெட் வீரரை கரம் பிடித்த தலைவாசல் விஜயின் மகள்.. நேரில் சென்று வாழ்த்திய விஜய் சேதுபதி.. வைரலாகும் புகைப்படங்கள்..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்த நடிகர் தான் தலைவாசல் விஜய். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் முதல் முதலாக 1992 ஆம் ஆண்டு தலைவாசல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் இறுதியாக 100% காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சன் டிவியில் அழகு என்ற சீரியலில் நடித்தார். இவ்வாறு பல புகழுக்குரிய இவரின் மகள் ஜெயவீனா ஒரு நீச்சல் வீராங்கனை. பல நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில் இவருக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் பாபா அபராஜித்திற்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் வைரலானது.

Advertisement

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் தலைவாசல் விஜய் மகள் ஜெயவீனாவின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று உள்ளது. அவரின் திருமண நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

ChennaiTimesTOI இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@chennaitimestoi)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in