‘சந்தேகமே இல்ல!… அடுத்த சூப்பர் ஸ்டார் இவர் தான்’… பரபரப்பை கிளப்பிய இயக்குனர்… கொந்தளிக்கும் தல, தளபதி ரசிகர்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘சந்தேகமே இல்ல!… அடுத்த சூப்பர் ஸ்டார் இவர் தான்’… பரபரப்பை கிளப்பிய இயக்குனர்… கொந்தளிக்கும் தல, தளபதி ரசிகர்கள்…

Published

on

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டி.டி.எப் வாசன். இவர் பிரபல யூடியூபர். இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை வீடியோவாக எடுத்து யூடியூபில் பதிவேற்றம் செய்து வருகிறார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிவேக பயணம் காரணமாக பல வழக்குகளையும் சந்தித்துள்ளார்.

டிடிஎஃப் வாசன் 2K கிட்ஸ்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறார் என்ற விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. விமர்சனங்களைத் தாண்டி டி.டி.வி.வாசனை யூடியூபில் சப்ஸ்கிரைப் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை ரூ.35 லட்சத்தை தாண்டியுள்ளது. தற்பொழுது முதல் முறையாக TTF வாசன் கதையின் நாயகனாகவும், நடிகராகவும் களமிறங்க உள்ள திரைப்படம் தான் மஞ்சள் வீரன்.

Advertisement

இந்த திரைப்படத்தை திருவிக பூங்கா என்ற திரைப்படத்தை இயக்கிய செல் ஆம் என்ற இயக்குனர் இயக்கி வருகின்றார். கடந்து சில நாட்களாகவே இவர் அளித்து வரும் பேட்டிகள் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தனியார் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், சந்தேகமே இல்லாமல் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக வரக்கூடிய அனைத்து தகுதிகளும் டிடிஎஃப் வாசனுக்கு இருக்கிறது என்று கூறி உள்ளார். இது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தை அளித்துள்ளது. ஆனால் இத்தகவலை அறிந்த தல, தளபதி ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in