கொடைக்கானலில் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சைலண்ட்டாக பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா செய்த வேலை… பரபரப்பு குற்றச்சாட்டு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கொடைக்கானலில் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சைலண்ட்டாக பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா செய்த வேலை… பரபரப்பு குற்றச்சாட்டு..!!

Published

on

தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் தான் பிரகாஷ்ராஜ். இவர் தற்போது பல திரைப்படங்களில் குணசத்திர வேடங்களில் நடித்து வருகின்றார். இதனிடையே கொடைக்கானல் மலை கிராம விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்ட கூட்டத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது நடிகர் பாபி சிம்ஹா அரசு விதிகளை மீறி கொடைக்கானலில் மலை கிராம விவசாயிகள் செல்லக்கூடிய சாலையை ஆக்கிரமித்து மூன்று மாடி கட்டிடத்தை கட்டி வருகிறார்.

அதனைப் போலவே பிரகாஷ்ராஜ் அரசு அனுமதி இல்லாமல் ஜேசிபி வாகனங்களை கொண்டு சாலை அமைத்து வருகின்றார். பெத்துப்பாறையில் 15 வருடங்களாக சாலை வசதி இல்லாத காரணத்தால் கிராம சபை கூட்டத்தில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. ஆனால் அந்த சாலை அமைப்பதற்கு பிரகாஷ்ராஜ் பணம் கொடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில் இதில் முறைகேடு நடந்துள்ளது.

Advertisement

அனுமதி இல்லாமல் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா இருவரும் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். இருவரும் சட்ட விரோதமாக சொகுசு பங்களா கட்டி வருவதாக விவசாயிகள் கூட்டத்தின் மூலம் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் உறுதியளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in