தாத்தாவின் 100-வது பிறந்த நாளை கொண்டாடிய விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தாத்தாவின் 100-வது பிறந்த நாளை கொண்டாடிய விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவரின் ஆக்சன் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வெற்றி தான்.

அந்த அளவிற்கு தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். தமிழ் ரசிகர்களால் கேப்டன் என்று அன்பாக அழைக்கப்படுபவர்.

Advertisement

நடிப்பு ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகர் சங்கத்தின் தலைவராகவும் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தவர் விஜயகாந்த்.

அப்படிப்பட்ட சிறந்த ஹீரோவாக விளங்கிய விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

Advertisement

அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அது மட்டுமல்லாமல் சமீபத்தில் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவர் ரசிகர்களை சந்தித்தபோது அமரக்கூட முடியாமல் உடல்நிலை மோசமான நிலையில் இருந்தார்.

Advertisement

அதனைக் கண்ட தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் கண்கலங்கி நின்றனர்.

அதனால் அரசியல் சம்பந்தமான அனைத்து வேலைகளையும் விஜயகாந்த் மனைவி பிரேமலதா மற்றும் மகன் பிரபாகரன் ஆகியோர் பார்த்து வருகின்றனர்.

Advertisement

இதனிடையே விஜயகாந்த் இரண்டாவது மகன் விஜய பிரபாகரன் சில வருடங்களுக்கு முன்பே கீர்த்தனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் விஜய பிரபாகரன் அடிக்கடி புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

Advertisement

அவ்வகையில் தற்போது தனது தாத்தாவின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு ஆஸ்ரமத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் ஊனமுற்றோருக்கு உணவு வழங்கியுள்ளார்.

அது தொடர்பான புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in