திருமண நாளில் விக்னேஷ் சிவன் கொடுத்த சர்ப்ரைஸ்…. கண்ணீர் விட்டு அழுத நயன்தாரா…. வெளியான வீடியோ…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திருமண நாளில் விக்னேஷ் சிவன் கொடுத்த சர்ப்ரைஸ்…. கண்ணீர் விட்டு அழுத நயன்தாரா…. வெளியான வீடியோ…!!!

Published

on

தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா அளவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார்.

அதன் பிறகு காதலில் சிக்கிய இவர் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இருந்து வந்தார். இதனிடையே இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டனர். இருந்தாலும் அதனை வெளிப்படுத்திக் கொள்ளாமல் சுமார் ஏழு ஆண்டுகள் காதல் ஜோடியாக கோலிவுட் திரை உலகில் வலம் வந்தனர். அதன் பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் ஒன்பதாம் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

Advertisement

இந்நிலையில் நேற்று நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் தங்களின் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய நிலையில் தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை நயன்தாரா வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து தனது மனைவியை சர்ப்ரைசெய்ய விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெறும் பாடலை இசை கலைஞர்களை வைத்து புல்லாங்குழல் மூலம் வாசிக்க வைத்துள்ளார். அந்தப் பாடலைக் கேட்கும்போது நயன்தாரா கண்ணீர் விட்டு அழுதுவிட்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Vignesh Shivan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@wikkiofficial)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in