உடற்பயிற்சியின் போது ஏற்பட்ட பெரிய விபரீதம்… உயிர் தப்பிய விஜே ரம்யா… போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உடற்பயிற்சியின் போது ஏற்பட்ட பெரிய விபரீதம்… உயிர் தப்பிய விஜே ரம்யா… போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் டிடிக்கு பிறகு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் ரம்யா.இவருக்கு பின்னர் தான் பாவனா மற்றும் பிரியங்கா என அடுத்தடுத்த தொகுப்பாளினிகள் விஜய் டிவியில் இடம் பிடித்தனர்.டிவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர் தான் தொகுப்பாளினி ரம்யா.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அதேசமயம் பல கலை நிகழ்ச்சிகள் மற்றும் இசை வெளியீட்டு விழா என பல விழாக்களிலும் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

Advertisement

கடந்த 2007 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் ரம்யா துணை கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியிருந்தார். அதன் பிறகு ஓ காதல் கண்மணி, மங்காத்தா,மாசு என்கிற மாசிலாமணி மற்றும் வனமகன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

இவர் சினிமாவை தாண்டி பளுதூக்கும் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். அடிக்கடி உடல் பயிற்சி குறித்த பல தகவல்களை இணையத்தில் பகிர்ந்த வண்ணம் இருப்பார்.இந்நிலையில் தற்போது ரம்யா உடற்பயிற்சி செய்யும் போது தனக்கு நேர்ந்த விபத்து குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். தசைகளை குறி வைக்கும் சவாலான உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது உயரமான கால் குரூப்ஸ் பிரிட்ஜை செய்ய முயற்சித்ததால் காயம் ஏற்பட்டது.

Advertisement

உடற்பயிற்சி செய்யும் போது தன்னுடைய இடுப்பில் பொறுத்து இருந்த உடற்பயிற்சியின் கிலோ டேம்பில் தவறுதலாக உருண்டு என்னுடைய முகத்தில் விழுந்தது. கிட்டத்தட்ட இடையின் பாதி என்னுடைய கழுத்தை நெறித்து விட்டது. அதிர்ஷ்டவசமாக உடனடியாக எனக்கு பலரும் உதவி செய்தனர். அதனால் பெரிய விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்று தனக்கு ஏற்பட்ட காயத்தின் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in