‘என் மன வானில்’ பட நடிகர் ஜெயசூர்யாவின் குடும்ப புகைப்படங்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘என் மன வானில்’ பட நடிகர் ஜெயசூர்யாவின் குடும்ப புகைப்படங்கள்…

Published

on

இயக்குனர் வினயன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான படம் ‘என் மன வாழ்வில்’ இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஜெயசூர்யா,  காவ்யா,  மாதவன்,  வடிவேலு,  விஜயகுமார் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.இப்படத்தில் கணேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகர் ஜெயசூர்யா.

இவர் கேரளாவை  பூர்வீகமாகக் கொண்டவர். இவரின் தந்தை மணி தாய் தங்கம். நடிகர் ஜெயசூர்யா தனது பள்ளி படிப்பை சம்பக்கராவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் யுபி பள்ளியிலும் மற்றும் திருப்புனித்துராவில் உள்ள அரசு சமஸ்கிருத உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.எர்ணாகுளத்தில் உள்ளஅனைத்து புனிதர்கள் கல்லூரியில் Commerce பட்டம் பெற்றார்.

Advertisement

அதன் பிறகு மிமிக்கிரி கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கினார். மலையாள தொலைக்காட்சியில்  தொகுப்பாளராக பணியாற்றினார். 1999இல் வெளியான பத்திரம் என்ற திரைப்படத்தில் பின்னணி  நடிகராக திரையுலகில் அறிமுகமானார்.அதைத் தொடர்ந்து இவர் ‘ஊமப்பெண்ணினு உரியடப்பையன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில்  மிகுந்த வரவேற்பு பெற்றார்.

இப்படமானது இவரது திரைப்பயணத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.இதை தொடர்ந்து இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ் மலையாளம் போன்ற மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர், தயாரிப்பாளர்,  பின்னணி,  பாடகர்,  மாடல் என பன்முகத்திறமைகளை  கொண்டு மலையாள திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருகிறார்.

Advertisement

நடிகர்  ஜெயசூர்யா சரிதா என்பவரை காதலித்து 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in