மிரட்டலான வில்லன் ரகுவரன் மகனா இது?… இதுவரை பலரும் பார்க்காத அழகிய குடும்ப புகைப்படங்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மிரட்டலான வில்லன் ரகுவரன் மகனா இது?… இதுவரை பலரும் பார்க்காத அழகிய குடும்ப புகைப்படங்கள்…!!

Published

on

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகர் ரகுவரன். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் 1982 ஆம் ஆண்டு வெளியான அக்கா என்ற மலையாளத் திரைப்படத்தில் முதல் முதலாக சினிமாவில் நுழைந்தார்.

அதனை தொடர்ந்து தமிழில் ஏழாவது மனிதன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே கதாநாயகனாக அறிமுகமாகிய ரகுவரன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

Advertisement

சினிமாவில் ஆரம்பத்தில் ஹீரோ மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரகுவரன் அதன் பிறகு வில்லனாக புதிய அவதாரம் எடுத்தார். ஆனால் ஹீரோ கதாபாத்திரத்தை விட வில்லன் கதாபாத்திரம் தான் இவருக்கு நன்றாக பொருந்தியது.

இதனைத் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். 90s ரசிகர்களுக்கு ரகுவரன் ஒரு மிரட்டலான வில்லனாக மிகவும் பிரபலமானவர்.

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இவர் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

இப்படி பிசியான நடிகராக இருந்த ரகுவரன் கடந்த 1996 ஆம் ஆண்டு நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார். ரோகினியும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக திகழ்ந்தவர் தான்.

Advertisement

1975 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ரோகிணி தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் ஆரம்பத்தில் கதாநாயகியாக அறிமுகமான ரோகினி அதன்பிறகு தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

 

Advertisement

அதன் பிறகு ரகுவரனை திருமணம் செய்து கொண்ட நிலையில் இரண்டு வருடத்தில் இவர்களுக்கு ரிஷிவரன் என்ற குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த ஆறு வருடங்களில் ரகுவரன் மற்றும் ரோகினி சம்பாதியினர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

அதன் பிறகு ரகுவரன் தனியாக வசித்து வந்த நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு சர்க்கரை நோய் காரணமாக அவர் உயிரிழந்தார். அவரின் மரணத்திற்கு ரோகிணி வந்திருந்தார். ரகுவரன் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும் இருந்துள்ளார்.

Advertisement

தன்னுடைய சிறு வயது முதலே இசையின் மீது அதிக ஆர்வம் கொண்ட ரகுவரன் ஒரு இசையமைப்பாளராக வரவேண்டும் என்பதுதான் அவருடைய நீண்ட நாள் ஆசை. லண்டனில் இசை கல்லூரியில் ரகுவரன் படித்தார்.

 

Advertisement

ரகுவரன் 30 பாடல்களை இதுவரை கம்போஸ் செய்துள்ளார். இந்நிலையில் ரகுவரன் இசையமைத்த பாடல்களை அவரின் மனைவி ரோகினி மற்றும் அவரது மகன் ரிசீயும் கடந்த 2018 ஆம் ஆண்டு ரகுவரன் இசை பயணம் என்ற ஆல்பம் பெயரில் வெளியிட்டனர்.

தற்போது ரகுவரன் மகன் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்து நிற்கிறார். இந்நிலையில் ரகுவரனின் குடும்ப புகைப்படங்கள் மற்றும் பலரும் பார்க்காத புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in