மெடிக்கல் ஷாப் To திரைப்பட தயாரிப்பாளர்… சினிமாவில் ஜொலிக்கும் ஜெயப்பிரகாஷின் அழகிய குடும்ப புகைப்படங்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மெடிக்கல் ஷாப் To திரைப்பட தயாரிப்பாளர்… சினிமாவில் ஜொலிக்கும் ஜெயப்பிரகாஷின் அழகிய குடும்ப புகைப்படங்கள்…!!

Published

on

எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அனைத்திலும் பொருந்த க்கூடியவர்தான் நடிகர் ஜெயப்பிரகாஷ். சிறப்பு தோற்றங்களில் சிறப்பாக தோன்றி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

சொக்கலிங்க வாத்தியாராக இருக்கட்டும் ஜூடோ டாக்டராக இருக்கட்டும் ஒரு பிரகாசம் அப்பா எனபல கதாபாத்திரங்களில் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

Advertisement

ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் ரசிகர்களை கவர்ந்தவர் தான் ஜெயப்பிரகாஷ். 1962 ஆம் ஆண்டு மயிலாடுதுறை அருகே உள்ள சீர்காழி என்ற கிராமத்தில் பிறந்த இவர் puc மயிலாடுதுறையில் ரயில் மூலம் கிராமத்தில் இருந்து பயணித்து வந்து படித்தார்.

மேற்படி படிப்பதற்கு விருப்பம் இல்லாததால் படிப்பை நிறுத்திவிட்டு மெக்கானிக்கல் ஷாப்பில் வேலை செய்து வந்தார். இவரின் விடாமுயற்சியால் சீர்காழியிலிருந்து சென்னை வந்து ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்தார்.

Advertisement

அதே சமயம் அவரது கசின் பெட்ரோல் பங்க் ஒன்றிலும் அவர் வேலை செய்து வந்துள்ளார். இப்படி பல வேலைகளை செய்து வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறிய இவர் முதன்முதலாக 1995ஆம் ஆண்டு தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி படமான சிசின்றி என்ற படத்தை தமிழில் டப் செய்து சுட்டி குழந்தை என்ற பெயரில் இந்த திரைப்படத்தை தயாரித்தார்.

அதன் பிறகு தற்போது வரை 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் தயாரிப்பாளராகவும் இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் முதலில் 1995ஆம் ஆண்டு வெளியான தொண்டன்என்ற திரைப்படத்தில் முதன் முதலில் சினிமாவில் நுழைந்தார்.

Advertisement

அதன் பிறகு 1997 ஆம் ஆண்டு டைரக்டர் மற்றும் நடிகருமான சேரனின் பொற்காலம் என்ற திரைப்படத்தில் ஜெயப்பிரகாஷ் தயாரிப்பாளராக நுழைந்தார்.  அதனை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு வெளியான மாயக்கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் மிகச் சிறந்த கதாபாத்திரத்தில் நடித்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தார்.

அதனைப் போலவே 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க என்ற திரைப்படத்தில் சொக்கலிங்கம் வாத்தியாராக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதே ஆண்டு வெளியான நாடோடிகள் திரைப்படத்திலும் தன்மதன் நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தினார்.

Advertisement

இதனை தொடர்ந்து நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தார். இவர் தற்போது வரை 160 க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் மிகச்சிறந்த கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த படங்களில் 80 சதவீதத்திற்கும் மேல் வெற்றி படங்கள்தான். சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன் 2.0 திரைப்படத்தில் வில்லனாக வந்த அக்ஷய் குமார் அவர்களுக்கு இவர் தான் டப்பிங் கொடுத்தார்.

Advertisement

இவருடைய நடிப்பு திறமைக்கு பிலிம் பேர் விருது 2010 பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்டர் மற்றும் விஜய் அவார்ட்ஸ் பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்டர், மேன் ட்ரீட் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்டர் உள்ளிட்ட பல அவார்டுகளை இவர் பெற்றுள்ளார்.

இவர் ஜெனித் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு உதித் துஷ்யந்த், நிரஞ்சன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

Advertisement

இவர்கள் இருவருமே சினிமாவில் பல துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் ஜெயப்பிரகாஷின் குடும்ப புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in