LATEST NEWS
எதிர்நீச்சல் சீரியலில் இருந்து திடீரென விலகிய முக்கிய பிரபலம்… ஷாக்கான ரசிகர்கள்..!!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் முன்னணி நடிகைகளான கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா மற்றும் சத்யபிரியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
அதனைப் போலவே மாரிமுத்து மற்றும் பாம்பே ஞானம் போன்ற நடிகர்களும் நடித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆணாதிக்கம் மற்றும் பெண்ணுரிமை போன்ற கருத்துக்களை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் எஸ் கே ஆரின் கடைசி தம்பி ஆகவும், ஆதிரையின் காதலராகவும் நடித்து வருபவர் தான் மது கார்த்தி.
அருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் இவரின் கதாபாத்திரம் முக்கியத்துவம் இல்லாத வகையில் சென்று கொண்டிருப்பதால் இந்த சீரியலில் இருந்து அவர் விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே விரைவில் இவருக்கு பதிலாக மற்றொரு பிரபலம் இந்த சீரியலில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
