அப்பாவை போல பிள்ளை என்று சும்மாவா சொல்றாங்க! ராகவா லாரன்ஸின் மகள் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? – cinefeeds
Connect with us

LATEST NEWS

அப்பாவை போல பிள்ளை என்று சும்மாவா சொல்றாங்க! ராகவா லாரன்ஸின் மகள் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

Published

on

ராகவா லாரன்ஸ் ஒரு நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் பின்னணி பாடகராகவும் படங்களில் தோன்றியுள்ளார். இந்திய சினிமாவின் பிரபலமான டான்ஸ் மாஸ்டராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். டான்ஸ் மாஸ்டராக தன்னுடைய கேரியரை தொடங்கி தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார். பேய்களை குத்தகைக்கு எடுத்து இவர் எடுத்த பேய் படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வசூலையும் வாரி குவித்தது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் அடுத்ததாக சந்திரமுகி2 தயாராக உள்ளது.

இந்நிலையில் பெரும்பாலும் ராகவா லாரன்ஸ் தன்னுடைய குடும்ப புகைப்படங்களை அவ்வளவாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டதில்லை. பெரும்பாலும் அவருடைய அம்மா புகைப்படத்தை மட்டுமே பகிர்ந்து கொள்வார். ராகவா லாரன்ஸுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள் என்பதே சிலருக்கு தெரியாது. அந்த வகையில் சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்துள்ளார் ராகவா லாரன்ஸ் மகள் ராகவி.

Advertisement

ராகவிக்கும் அப்பாவைப் போலவே பெரிய டான்ஸ் மாஸ்டராக வரவேண்டும் என்பது ஆசை. ஏற்கனவே ராகவா லாரன்சின் தம்பி டான்ஸ் மாஸ்டராக இருந்து தற்போது ஹீரோவாக மாறுகிறார். இதுவரை ராகவா லாரன்ஸின் மகளை பார்க்காதவர்கள் தற்போது இந்த புகைப்படத்தை அதிகம் பகிர்ந்து வருகின்றனர். ராகவா லாரன்ஸ் ராகவேந்திரர் சாமியின் பெரிய பக்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in