LATEST NEWS
சமீபத்தில் சமந்தா முத்தம் கொடுத்த தோழிக்கு கொரானா… பயத்தில் சமந்தாவை ஒதுக்கி வைத்த குடும்பம்!
சமந்தா தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நடிகை ஆவர், மேலும் நான்கு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றவர். தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அந்த வகையில் அடுத்தடுத்த அவரது நடிப்பில் வெளிவர பல படங்கள் வெயிட்டிங்.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா.
இந்நிலையில் சமீபத்தில் தனது தோழி ஒருவருக்கு முத்தம் இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் சமந்தா. இதற்கு பல கமெண்ட்டுகள் குவிந்தன. இந்நிலையில் சமந்தாவின் தோழிக்கு கொரானா தொற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மிகவும் கலக்கத்தில் உள்ளாராம் சமந்தா. தோழிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தனக்கு வந்துவிடுமோ என்ற பயத்தில் உள்ளாராம்.
அதுமட்டுமில்லாமல் வீட்டிற்குள்ளேயே தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. யோகா புகைப்படங்கள் வெளியிடுவதுகூட பயத்தை வெளிக்காட்டாமல் இருப்பதற்காகத்தானாம். வீட்டிலேயே தனியாக ஒரு மருத்துவரை வைத்து அவ்வப்போது தனது உடலை பரிசோதித்துக் கொண்டிருக்கிறாராம் சமந்தா. வெளியில் தெரிந்தால் பெரிய பிரச்சனையாகி விடும் என பொத்திப் பொத்தி பாதுகாத்து வருகிறார்களாம்.
