LATEST NEWS
இந்த புகைப்படத்தை இருக்கும் இந்த சிறுமி யார் தெரிகிறதா..? சினிமாவில் கலக்கிய பிரபல நடிகை இவர்..
நடிகை மீனா தமிழ் சினிமாவில் கடந்த 1984 ஆம் ஆண்டு வெளிவந்த “அன்புடன் ரஜினிகாந்த்” படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன்பின் கதாநாயகியாக நடிக்க துவங்கியவர் தான் நடிகை மீனா அவர்கள். இவர் தமிழில் முதன் முதலில் வெளிவந்த “ஒரு புதிய கதை” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ் என பலருடன் பல படங்களில் இணைந்து நடிக்க துவங்கினார். பல மொழி படங்களில் நெறய நடித்துள்ளார் நடிகை மீனா. மேலும், இவர் கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். நடிகை மீனாவிற்கு நைனிகா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது என்பது நமக்கு தெரியும்.
நைனிகா அவர்கள் ‘தெறி’ படத்தில் நடிகர் விஜயுடன் சேர்ந்து நடித்திருப்பார். இந்நிலையில், நடிகை மீனாவின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் பார்த்திராத அவருடைய சிறு வயது புகைப்படம் இதோ..
