LifeStyle
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய 7 போட்டியாளர்கள்…. வெளியேறப் போவது யார் தெரியுமா….????
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற தற்போது 11 போட்டியாளர்கள் வெளியேறி பத்து போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் போட்டி கடுமையாகி வரும் நிலையில் தற்போது மொத்தம் ஏழு பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
மணிகண்டன், ஏ டி கே மற்றும் அமுதவாணன் ஆகிய மூன்று பேரும் கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்கேல் வெற்றி பெற்றதால் அந்த மூன்று பேரும் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்படவில்லை. எனவே மீதமுள்ள ஏழு பேரில் மட்டும்தான் நாமினேஷன் நடைபெற வேண்டும். அந்த ஏழு பேரும் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி விக்ரமன், அசீம், தனலட்சுமி, ரட்சிதா, கதிரவன், மைனா மற்றும் ஷிவின் ஆகிய ஏழு பேரும் நாமினேசன் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஏழு பேரும் முக்கிய போட்டியாளர்கள் என்பதால் இவர்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே வெளியில் உள்ளது. இந்த வாரம் இவர்களில் யார் வெளியேறப் போகிறார் என எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அதேசமயம் தனலட்சுமி வெளியேற அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர் வெளியேறவிட்டால் மைனா மற்றும் கதிரவன் ஆகிய இரண்டு பேரில் ஒருவர் வெளியேற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
