ரீ ரிலீஸில் வசூல் வேட்டை நடத்திய வேட்டையாடு விளையாடு திரைப்படம்… 45 நாட்களில் இவ்வளவு வசூலா?… மிரண்டு போன திரையுலகம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரீ ரிலீஸில் வசூல் வேட்டை நடத்திய வேட்டையாடு விளையாடு திரைப்படம்… 45 நாட்களில் இவ்வளவு வசூலா?… மிரண்டு போன திரையுலகம்..!!

Published

on

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் காவல்துறை சார்ந்த படங்கள் நிறைய உள்ளன. அதில் ரஜினி தொடங்கி சூர்யா வரை பலரின் போலீஸ் கேரக்டர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதன்படி கடந்த 2003 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் காக்க காக்க திரைப்படம் வெளியான நிலையில் அதனை தொடர்ந்து வித்தியாசமான திரைக்கதையை வைத்து இயக்குனர் கௌதம் மேனன் 2006 ஆம் ஆண்டு மீண்டும் போலீஸ் கதையை கையில் எடுத்த திரைப்படம் தான் வேட்டையாடு விளையாடு. சினிமாவில் இயக்குனரான மூன்றாவது படத்திலேயே முன்னணி நடிகரான கமல்ஹாசனை வைத்து இந்த திரைப்படத்தை இயக்கினார்.

அதிதிவீரர் கமல் ரசிகரான கௌதம் மேனன் வேட்டையாடு விளையாடு கதையை இயக்க பிடிவாதமாக இருந்ததால் இந்த திரைப்படம் உருவானது. கமல் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் கமாலினி முகர்ஜி, ஜோதிகா மற்றும் டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். குறிப்பாக கமலின் டிஜிபி ராகவன் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

Advertisement

இந்த திரைப்படம் உருவானபோது கமலின் நிஜ வயது 50. தற்போது இந்த திரைப்படம் வெளியாகி சுமார் 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு வேட்டையாடு விளையாடு திரைப்படம் கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் புதுப்பொலிவுடன் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. சென்னையில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகள் நிறைந்து வந்தது. சுமார் 45 நாட்கள் ரி ரிலீஸ் செய்யப்பட்ட இந்த திரைப்படம் 80 லட்சத்தை கடந்து வசூல் வேட்டை நடத்தியதாக கூறப்படுகிறது.

அதேசமயம் இந்த வெற்றியை தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து வேட்டையாடு விளையாடு 2 திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in