LATEST NEWS
ஒத்த பார்வையில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி போட்ட 80 நடிகை ராதாவா இது?… குண்டாகி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே…!!
தென்னிந்திய சினிமாவில் 1980 களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை ராதா. இவர் நடித்த பெரும்பாலான படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால் 80களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். இவர் நடிக்க வந்த ஆறு வருடங்களில் கிட்டத்தட்ட 100 படங்களில் நடித்ததுடன் 10 வருடங்களில் 162 படங்களில் நடித்து மாபெரும் சாதனை படைத்தவர்.
இந்த சாதனை இந்திய அளவில் எந்த ஒரு நடிகையும் இதுவரை செய்திடாத சாதனையாகும். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் என அனைவரிடமும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படி பிசியான நடிகையாக சினிமாவில் உச்சத்தில் இருந்து வந்த இவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் செய்து கொண்டு பிசினஸ் மற்றும் குடும்ப வாழ்க்கையில் பிஸியானார்.
அதன் பிறகு சினிமாவை ஓரம் கட்டி எந்த ஒரு படத்திலும் நடிக்க வரவில்லை. சமீபகாலமாக பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார். இந்நிலையில் ராதாவின் புகைப்படங்கள் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் குண்டாகி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.
