#image_title

தமிழில் கடந்த 2002 ஆம் ஆண்டு அசோகன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் சுந்தரா ட்ராவல்ஸ். இந்த திரைப்படத்தில் முரளி மற்றும் வடிவேலு இருவரும் அசத்தலான காமெடியில் நடித்து மக்களை வெகுவாக கவர்னர். ஒரே ஒரு பேருந்தை வைத்து கதை மிகவும் காமெடியாக இருந்தது. குறிப்பாக திரைப்படத்தின் முரளி மற்றும் வடிவேலு காம்பினேஷன் அட்டகாசமாக இருக்கும்.

இன்றும் பல தொலைக்காட்சிகளில் இந்த திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் வசந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் ராதா. இவரின் முதல் படத்திலேயே வெற்றி அடைந்ததால் அதனை தொடர்ந்து அடாவடி மற்றும் காத்தவராயன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

அதன் பிறகு பல வருடங்களாக காணாமல் போன இவர் தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு சினிமாவில் நடிக்க வந்துள்ளார். அதாவது விஜய் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா 2 சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் இவர் நடிக்க தொடங்கியுள்ளார். இதனால் இவரின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.