தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமல் காலகட்டத்தில் தொடங்கி இன்று வரை பல்வேறு படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் தான் நடிகர் நாசர். இவரின் நடிப்புக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்று கூறலாம். அந்த அளவிற்கு படங்களில் தனது நடிப்பின் திறமையை அபூர்வமாக வெளிப்படுத்தியவர்.இவர் கடந்த வருடம் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வீரபாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் நாசர் பேட்டி ஒன்றில் பங்கேற்றபோதுஅவர் வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்களும் மற்றும் சினிமா அனுபவங்களை பகிர்ந்து உள்ளார். அந்த பேட்டியில், நான் சினிமாவில் நடிக்க வர வேண்டும் என்ற பெரிய எண்ணம் எதுவும் கிடையாது. இருந்தாலும் சூழ்நிலை என்னை மாற்றி விட்டது. என்னுடைய தந்தை நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று விரும்பினார்.

என்னுடைய மூக்கு கிளி மூக்கு போல உள்ளது என்று பலரும் கூறுவார்கள். நான் பள்ளியில் படிக்கும் போது என்னை கிளி மூக்கு என்றுதான் அனைவரும் அழைப்பார்கள். அதே சமயம் என்னுடைய நெத்தியும் பெரிதாக இருக்கும். இதனால் எனக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமானது. பட வாய்ப்புகளை தேடுவதற்கு மிகவும் தயங்கினேன். இயக்குனர் பாலச்சந்தர் சார் தான் திரைத்துறையில் என்னை அறிமுகம் செய்து வாழ்க்கை கொடுத்தார் என நாசர் மனம் திறந்து பேசியுள்ளார்.