எத்தனை கோடி கொடுத்தாலும் இனி அவர் கூட மட்டும் நடிக்க மாட்டேன்…. நயன்தாரா முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

எத்தனை கோடி கொடுத்தாலும் இனி அவர் கூட மட்டும் நடிக்க மாட்டேன்…. நயன்தாரா முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் கடந்த வருடம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். தற்போது ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்தடுத்த பல திரைப்படங்களிலும் நடிக்க கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி பிசியாக இருக்கும் நயன்தாரா தற்போது செம்ம கடுப்பில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தை முதலில் இயக்க நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் திட்டமிட்டு இருந்தார். விக்கிக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதற்கு நயன்தாரா அஜித்திடம் பேசியது தான் முக்கிய காரணம் எனவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஸ்கிரிப்ட் அனைத்தும் தயார் செய்து விட்டு விக்னேஷ் சிவன் ஏ கே 62 திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு தயாராக இருந்த நிலையில் கடந்த மாதம் திடீரென அந்த திரைப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார்.

Advertisement

அவரின் கதை லைகா நிறுவனத்திற்கும் அஜித்துக்கும் திருப்தி அளிக்காததால் அவரை ஏ கே 62 திரைப்படத்திலிருந்து தூக்கி விட்டு அவருக்கு பதில் மகில் திருமேனியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனால் அஜித் மீது நயன்தாரா செம கோபத்தில் உள்ளார். அது மட்டுமல்லாமல் அவர் ஒரு அதிரடி முடிவையும் எடுத்துள்ளார்.

அதாவது இனி எத்தனை கோடி கொடுத்தாலும் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடிக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு நயன்தாரா வந்துள்ளதாக புதிய செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்தச் செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் நயன்தாரா தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in