LATEST NEWS
“4.5 கோடி டிஃபென்டர் காரை உரசிய ஸ்கூட்டர்..!” நடுரோட்டில் முதியவருடன் ரகளை செய்த பெண்…அடுத்து நடந்த சம்பவத்தை நீங்களே பாருங்க.. நெட்டிசன்களை கொதிக்க வைத்த வைரல் சம்பவம்..!!
பழைய டெல்லியைச் சேர்ந்த 64 வயதான முதியவர் ஒருவர், தனது ரூ.4.50 கோடி மதிப்புள்ள டிஃபென்டர் காரில் சென்றுகொண்டிருந்தபோது, கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக அருகில் வந்த ஒரு பெண்ணின் ஸ்கூட்டர் காரின் மீது லேசாக உரசியது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், தனது வயதையும் மறந்து அந்த முதியவரை தகாத வார்த்தைகளால் திட்டத் தொடங்கினார். மூத்த குடிமக்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற குறைந்தபட்ச மரியாதைகூட இல்லாமல் அந்தப் பெண் கோபத்தை வெளிப்படுத்தினார்.
पुरानी दिल्ली का ये 64 वर्षीय बुजुर्ग अपनी ₹4.50 करोड़ की Defender गाड़ी लेकर जा रहा था, ट्रैफिक कारण इस लड़की की स्कूटी थोड़ी टच हो गई।
लड़की गुस्से से लाल/पीला हो गई और गाली-गलौच करने लगी, ऐसी लड़कियों को बिल्कुल भी तमीज नहीं है, एक बुजुर्ग के साथ किस तरह व्यवहार करना है।… pic.twitter.com/zMCPnxQQQF— BHUMI (@Bhumika_2024) August 7, 2026
முதியவருடன் காரில் வந்திருந்த அவருடைய பேத்தி, “மேடம், உங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு என்ன இழப்பீடோ அதை நாங்கள் தருகிறோம்; தயவுசெய்து என் தாத்தாவின் வயதிற்காவது கொஞ்சம் மரியாதை கொடுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார். அப்போது அங்கு வந்த ஓர் ஆட்டோ ஓட்டுநர், மனிதநேயத்துடன் அந்தப் பெண்ணிடம் முதியவரை இப்படித் திட்டுவது சரியில்லை என எடுத்துக்கூறினார். தொடர்ந்து, சேதத்திற்காக பேத்தி அளித்த ரூ.1000 பணத்தைப் பெற்றுக்கொண்ட அந்தப் பெண், அங்கிருந்து அமைதியாகக் கிளம்பிச் சென்றார்.
