தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு மான் கராத்தே மற்றும் வேலாயுதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதனிடையே சமீபத்தில் சோஹைல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனிடையே திருமணத்திற்கு பிறகு பிஸியாக நடித்து வரும் ஹன்சிகா தற்போது ஏழு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் ஹன்சிகாவின் திருமண வீடியோவை விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிட உள்ளார்.
அதன் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ள நிலையில் ஹன்சிகா அவரின் முன்னாள் காதலர் பற்றி கண்கலங்கி பேசியுள்ளார். அதாவது சிம்புவை இதற்கு முன்பு ஹன்சிகா காதலித்த நிலையில் அவர் குறித்து மனம் உருகி பேசியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க