தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத நிலையில் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார் .
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்ற வரும் நிலையில் திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் . இதனிடையே 1997 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான அருணாச்சலம் திரைப்படத்தில் சௌந்தர்யா,ரகுவரன் மற்றும் ரம்பா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
மாபெரும் வெற்றியடைந்த இந்த திரைப்படம் உலக அளவில் 32.71 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதில் இந்தியாவில் 25.55 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில் வெளிநாட்டில் 7 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் சாதனை படைத்துள்ளது. தற்போது இந்த செய்தி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.