CINEMA
“என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன்” சர்ச்சைகளை தாண்டி தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடிய ரச்சிதா …!!
சின்னத்திரை உலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட நடிகை ரச்சிதா மகாலட்சுமி இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் மூலம் பிரபலமான இவர், தற்போது வெள்ளித்திரையிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவருக்கு வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
தனது பிறந்தநாளை முன்னிட்டு ரச்சிதா தனது சமூக வலைதளப் பக்கத்தில் சிறுவயதில் தனது அம்மாவின் மடியில் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதனுடன் அவர் பதிவிட்டுள்ள உருக்கமான வரிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அம்மாவின் மீதான தனது அன்பையும், இந்த 35 ஆண்டு கால பயணத்தில் அவர் தனக்கு அளித்த ஆதரவையும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
குடும்பப் பிரச்சனைகள் மற்றும் தனிப்பட்ட சர்ச்சைகளைக் கடந்து, தற்போது தனது தாயுடன் வசித்து வரும் ரச்சிதா, இன்ஸ்டாகிராமில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். அவரது பிறந்தநாள் பதிவும், சிறுவயது புகைப்படங்களும் இணையத்தில் அசுர வேகத்தில் பரவி வைரலாகி வருகின்றன. இதனைப் பார்த்த ரசிகர்கள், ரச்சிதாவின் துணிச்சலையும் அம்மா மீதான பாசத்தையும் பாராட்டி வருகின்றனர்.
