ஆர்த்தியை போல் மாறுகிறாரா கெனிஷா..? விவாகரத்து சர்ச்சைக்கு நடுவே கெனிஷாவின் புதிய விவகாரம் ரவி மோகன் விவகாரத்தில் அடுத்த பரபரப்பு..! – cinefeeds
Connect with us

CINEMA

ஆர்த்தியை போல் மாறுகிறாரா கெனிஷா..? விவாகரத்து சர்ச்சைக்கு நடுவே கெனிஷாவின் புதிய விவகாரம் ரவி மோகன் விவகாரத்தில் அடுத்த பரபரப்பு..!

Published

on

தமிழ் திரையுலகில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் விஷயமாக நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி ஆகியோரின் விவாகரத்து விவகாரம் இருந்து வருகிறது. கடந்த 2024-ம் ஆண்டு ஆர்த்தியை பிரிவதாக ரவி மோகன் அறிவித்ததை தொடர்ந்து, இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த சூழலில், இவர்களின் பிரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படும் பாடகி கெனிஷா பிரான்சிஸ், ரவி மோகனுடன் பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக வலம் வருவது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் ரவி மோகனும் கெனிஷாவும் ஒன்றாகக் கலந்து கொண்டது சர்ச்சையை மேலும் அதிகமாக்கியது. ஒருபுறம் ஆர்த்தி ரவி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வரும் நிலையில், ரவி மோகன் கெனிஷாவுடன் நெருக்கம் காட்டி வருவதை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இதனால் கெனிஷா பகிரும் பதிவுகளுக்கு இணையத்தில் தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளே குவிந்து வருகின்றன.

Advertisement

இந்நிலையில், இதுவரை மாடர்ன் உடைகளில் காணப்பட்ட பாடகி கெனிஷா, தற்போது திடீரென குடும்பப் பாங்கான தோற்றத்தில் அழகான சேலை அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், அவர் ஆர்த்தி ரவியைப் போலவே மாற முயற்சிப்பதாகக் கூறி கிண்டல் செய்து வருகின்றனர். கெனிஷாவின் இந்த திடீர் மாற்றமும், ரவி மோகனுடனான அவரது தொடர்பும் இணையத்தில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in