#image_title

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் வாரிசு. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், ஜெயசுதா மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் காட்டப்பட்ட பிரம்மாண்டமான வீட்டை பார்த்து பலரும் வியந்தனர்.

இந்நிலையில் வாரிசு படத்தில் காண்பித்த வீடு உண்மையான வீடு இல்லை எனவும் அது படக்குழுவினர் போட்ட செட் எனவும் கூறப்படுகிறது. தில் ராஜீவுக்கு சொந்தமான ஒரு இடத்தில் அந்த செட் போடப்பட்டுள்ளது. அதற்கு மட்டும் எட்டு கோடிக்கு மேல் தில் ராஜு செலவு செய்துள்ளார். அந்த வீட்டின் அலங்காரத்திற்கு வாங்கிய பொருட்கள் அனைத்துமே புதிது என்றும் இதற்கு தில் ராஜு பல கோடி செலவு செய்தார் என்றும் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.