தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க பிரகாஷ்ராஜ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகி தற்போது 300 கோடி வசூலை கடந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது . இந்நிலையில் துணிவு திரைப்படத்தில் அஜித் சில காட்சிகளில் டூப் பயன்படுத்தியதாக பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கும் ஒருவர் சண்டை காட்சிகளில் டூப் ஆக நடித்துள்ளார் . அவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.