சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் விஜே மகாலட்சுமி.
இவர் சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியல் மூலம் சின்னத்திரை பயணத்தில் முக்கியமான இடத்தை பிடித்தார்.
பின்னர் தொடர்ந்து மூன்று வருடங்களாக செல்லமே, முந்தானை முடிச்சு மற்றும் இருமலர்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் அவர் நடித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மகாலட்சுமிக்கு அணில் என்பவர் உடன் திருமணம் நடைபெற்ற நிலையில் சில மாதங்களில் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
அப்போது பல சர்ச்சைகளும் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து கலந்து செப்டம்பர் மாதம் பிரபல தயாரிப்பாளர் லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை திருப்பதியில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் திடீரென திருமணம் செய்து கொண்டதால் இவர்களின் திருமணம் பல விமர்சனங்களுக்கு உள்ளானது.
இருந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி பல கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்தனர்.
தற்போது எதையும் கண்டு கொள்ளாமல் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் அவுட்டிங் செல்லும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் சீரியலில் அதிகம் கவனம் செலுத்தி வரும் மகாலட்சுமி மறுபக்கம் ஆடை அணிகலன் சார்ந்த சேலை மற்றும் பல பொருள்களை விளம்பரம் செய்து வருகிறார்.
தினம்தோறும் புதுவிதமான போட்டோ சூட் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு வரும் நிலையில் அவரின் அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


