தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்,இசையமைப்பாளர் மற்றும் பாடகர் என பன்முகம் கொண்ட கலைஞராக பலம் வந்து கொண்டிருப்பவர் பிரேம்ஜி அமரன். இசையமைப்பாளர் கங்கை அமரனின் இரண்டாவது மகன்தான் இவர். இவரின் அண்ணன் வெங்கட் பிரபு பிரபல இயக்குனர்.

இவர் இயக்கம் அனைத்து படங்களிலும் கட்டாயம் பிரேம்ஜி இருப்பார். தனது தம்பிக்காகவே கதையில் ஒரு கதாபாத்திரத்தை கொண்டு வந்து சேர்க்கும் வேலையை வெங்கட் பிரபு தொடர்ந்து செய்து வருகின்றார். தற்போது பிரேம்ஜிக்கு 43 வயதாகிறது.

ஆனால் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.இது குறித்து அவரிடம் பலமுறை கேட்டும் தான் முரட்டு செங்கல் என்று பதில் அளித்தார்.வீட்டில் பலமுறை வற்புறுத்தியும் தனக்கு திருமண ஆசை இல்லை என்று கூறி வருகிறார்.

இந்நிலையில் காதலர் தினத்தில் பிரேம்ஜி ட்விட்டரில் போட்ட ஒரு பதிவு தற்போது வைரல் ஆகிய வருகிறது. அதாவது நடிகை வாணி போஜன் நீல நிறையில் க்யூட்டான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அதனைப் பார்த்து பிரேம்ஜி ஹார்டின் விட்டுள்ள ரியாக்ஷன் பகிர்ந்துள்ளார். அதனை நெட்டிசன்கள் கலாய்த்து இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.