தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகின்றார். இவர் நடிப்பையும் தாண்டி பலருக்கு உதவிகளை செய்து வருகிறார்.
அதன்படி கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு மாணவியின் படிப்பு செலவிற்கு இவர் அண்மையில் உதவி செய்திருந்தார். தனது படப்பிடிப்பு தளத்திற்கு ரசிகர்கள் வந்தால் கூட அல்லு அர்ஜுன் எக்காரணத்திற்காகவும் கோபப்பட மாட்டார். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் தன்னுடைய ரசிகர்களை சந்திப்பதற்காக ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து ரசிகர்களை சந்தித்து வருகின்றார்.
இந்நிலையில் ரசிகர்களை சந்திப்பதற்காக ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் அவர்களுடன் அல்லு அர்ஜுன் தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை தன்னுடைய கைகளில் ஏந்தியபடி அவர் புகைப்படம் எடுத்தார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.