#image_title

தமிழ் சினிமாவில் முன்னணி சூப்பர் ஹிட் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்து கொண்டிருப்பது தான் சூப்பர் குட் பிலிம்ஸ். ஆர்பி சௌத்ரி அவர்கள் நடத்தி வந்த இந்த தயாரிப்பு நிறுவனத்தில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. Rp சௌத்திரிக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் அவர்கள் இருவருமே தற்போது சினிமாவில் நுழைந்து நடிகர்களாக கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அவரின் இரண்டு மகன்கள் தான் ஜீவா மற்றும் சித்தன் ரமேஷ். இதில் ஜீவா பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் ஜித்தன் ரமேஷ் அவ்வளவு அதிகமாக திரைப்படங்களில் எதுவும் நடிக்கவில்லை. ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவர் இறுதியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.

இந்நிலையில் ஜீவா மற்றும் ரமேஷின் அப்பாவை அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் அவரின் அம்மாவை யாரும் பார்த்ததில்லை. இதனிடையே ஜித்தன் ரமேஷ் விஜய் டிவி நிகழ்ச்சியின் போது தனது அம்மாவை முதல் முறையாக வெளிக்காட்டினார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.