#image_title

பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் ஷாருக்கான் . இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான பதான் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படம் வெளியாக உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.  ஜவான் திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்து வருகின்றனர்.

இதனிடையே நயன்தாராவிற்கு கடந்த வருடம் இரட்டை குழந்தை பிறந்த நிலையில் அவர்களை பார்ப்பதற்காக சென்னையில் உள்ள நயன்தாராவின் வீட்டிற்கு ஷாருக்கான் சென்றுள்ளார். இவரின் வருகையை அறிந்த ரசிகர்கள் நயன்தாரா வீட்டில் முன்பு கூடினர். ஷாருக்கான் வழிய அனுப்பி வைக்க நயன்தாரா சென்ற போது ஷாருக்கான் அவருக்கு முத்தம் கொடுத்து அங்கிருந்து விடை பெற்றார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.