தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மாதவன். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ராக்கெட்டரி நம்பி விளைவு. முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை பின்னணியை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. இதனை மாதவன் இயக்கியுள்ளார். இந்தி, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல மொழிகளில் இந்த திரைப்படம் வெளியானது.
இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை. இதனிடையே மாதவனுக்கு வேதாந்த் மாதவன் என்ற ஒரு மகன் உள்ளார். அவர் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் நடைபெறும் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். அதன்படி சமீபத்தில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட வேதான் மூன்று தங்க பதக்கங்களையும் இரண்டு வெள்ளி பதக்கங்களையும் வென்றுள்ளார்.
இந்த செய்தியை மிகுந்த மகிழ்ச்சியுடன் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அவரின் மகனுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
With gods grace -Gold in 100m, 200m and 1500m and silver in 400m and 800m . 🙏🙏🙏👍👍 pic.twitter.com/DRAFqgZo9O
— Ranganathan Madhavan (@ActorMadhavan) February 12, 2023