உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்த பிரபல இந்திய நடிகர்…. அவர் யார் தெரியுமா?…. ரசிகர்கள் வாழ்த்து…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்த பிரபல இந்திய நடிகர்…. அவர் யார் தெரியுமா?…. ரசிகர்கள் வாழ்த்து…!!!

Published

on

பாலிவுட்டில் முன்னணி நடிகராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஷாருக்கான்.இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்கும். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.இன்னும் சொல்லப்போனால் பாலிவுட் திரை உலகின் சூப்பர் ஸ்டார் என்று கூட கூறலாம். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் தீபிகா படுகோன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் .

படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் அண்மையில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் ஷாருக்கான் கெட்டப் ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் ஷாருக்கான் பதான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.

Advertisement

இந்நிலையில் உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கான் நான்காவது இடத்தை பிடித்துள்ளார். உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியலை world of statistics தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் 770 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 6306 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்டு நடிகர் ஷாருக்கான் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in