கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு வேற லெவல் லுக்கில் சென்ற ப்ரியா – அட்லீ தம்பதி…. வைரலாகும் புகைப்படங்கள்…!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு வேற லெவல் லுக்கில் சென்ற ப்ரியா – அட்லீ தம்பதி…. வைரலாகும் புகைப்படங்கள்…!!

Published

on

இன்று சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் அட்லீ.

இவரின் இயக்கத்தில் முதல் முதலாக வெளியான திரைப்படம் ராஜா ராணி. தனது முதல் திரைப்படத்திலேயே ஆர்யா, நயன்தாரா மற்றும் நஸ்ரியா உள்ளிட்ட பெரிய நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்து அசத்தினார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் தெறி படத்தை இயக்கிய அவர் அடுத்தடுத்து மெர்சல் மற்றும் பிகில் என தொடர்ந்து தளபதி படங்களை இயக்கி மாஸ் காட்டினார்.

இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் கால் பதித்துள்ள அட்லி நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக வைத்து படம் ஒன்றை இயக்கி வருகின்றார்.

Advertisement

இந்தத் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கின்றார். அட்லீ இயக்கம் முதல் பாலிவுட் திரைப்படம் இதுவாகும்.

இந்த திரைப்படத்திற்கு ஜவான் என பெயரிடப்பட்டுள்ளது. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

இதனிடையே அட்லி மற்றும் பிரியா தம்பதிக்கு கடந்த ஜனவரி 31ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

தங்கள் மகனுக்கு Meer என  பெயர் சூட்டியுள்ளனர். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் நடைபெறும் 76 ஆவது கேன்ஸ்திரைப்பட விழாவிற்கு பிரியா மற்றும் அட்லி தம்பதியினர் சென்றுள்ளனர்.

Advertisement

இருவரும் கருப்பு நிற உடையில் அனைவரையும் கவரும் வகையான லுக்கில் சென்றுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in