காஞ்சிபுரம் கோவிலுக்கு மகளுடன் சென்று… சாமிதரிசனம் செய்த நடிகை சுரேகாவாணி… வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

காஞ்சிபுரம் கோவிலுக்கு மகளுடன் சென்று… சாமிதரிசனம் செய்த நடிகை சுரேகாவாணி… வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

Published

on

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சுரேகா வாணி. சுமார் 18 வருடங்களாக 100 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார்.

சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது காரியரை ஆரம்பித்தவர். 2003 இல் தெலுங்கு சினிமாவில் நடிகையானார். 2010ல் சுரேகா வாணி உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

Advertisement

அதன் பிறகு இவர் எதிர்நீச்சல், ஜில்லா, மெர்சல், விஸ்வாசம், லிசா, மாஸ்டர் என பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடந்த 2019 ல் கணவர் சுரேஷ் தேஜா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மரணம் அடைந்தார். இந்த தம்பதிக்கு சுப்ரிதா என்ற மகள் இருக்கிறார். இவருக்கு தற்பொழுது 20 வயது ஆகிறது.

Advertisement

 

தற்போது தன்னுடைய மகளுடன் சுரேகா வாணி வசித்து வருகிறார். இவர் தனது மகளின் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.

Advertisement

ஆனால் அவர் இதுவரை இதுதொடர்பாக  எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளியிடவில்லை.

நடிகை சுரேகாவாணி சமீபத்தில் தனது மகளின் பிறந்தநாளை குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார்.

Advertisement

இதைத்தொடர்ந்து தற்பொழுது காஞ்சிபுரம் கோவிலுக்கு தனது மகளுடன் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார் நடிகை சுரேகா வாணி. இதுதொடர்பான புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in