LATEST NEWS
ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் மகனின் பிறந்த நாளை கொண்டாட்டம்.. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்..!!
தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவர் 2021 ஆம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த இவர் காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து இவர் நடித்த கனா திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதனைப் போலவே விஜய் சேதுபதியுடன் பண்ணையாரும் பத்மினியும், ரம்மி மற்றும் தர்மதுரை ஆகிய திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
தற்போது கதைக்கு முக்கியத்துவம் மற்றும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் சரியான முறையில் தேர்வு செய்து நடித்து வருகின்றார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சொப்பன சுந்தரி, கிரேட் இந்தியன் கிச்சன் மற்றும் தீரா காதல் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றன.
இப்படி பிசியான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்பமே சினிமா துறையை சேர்ந்ததுதான்.
அவரின் அப்பா ராஜேஷ் தெலுங்கில் பிரபல நடிகர் ஆவார். ஐஸ்வர்யா ராஜேஷ் இன் உடன்பிறந்த அண்ணன் மணிகண்டனும் பிரபல நடிகர் தான்.
இவர் அழகு சீரியலில் பூர்ணாவின் கணவராக மகேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர். மணிகண்டன் இதுவரை 150-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
இவர் நடிகை சோபியாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மகனின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் அது தொடர்பான சில புகைப்படங்களை ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
