LATEST NEWS
விலை உயர்ந்த சொகுசு பைக் மற்றும் கார்களை வைத்திருக்கும் தமிழ் திரை பிரபலங்கள்… இதோ சிறப்பு தொகுப்பு..!!

பொதுவாகவே தமிழ் பிரபலங்கள் பலரும் ஆடம்பர பொருள்களை பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக விலை உயர்ந்த பைக் மற்றும் கார்களை நடிகர் நடிகைகள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி தமிழ் சினிமாவில் சொகுசு பைக்குகள் மற்றும் கார்களை வைத்திருக்கும் தொலைக்காட்சி பிரபலங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விஜய் சேதுபதி:
தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக திகழும் விஜய் சேதுபதி தற்போது நம்ம ஊரு ஹீரோ என்ற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் சுமார் 16 லட்சம் மதிப்புள்ள சூப்பர் பைக் ஒன்றை வைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் இவரிடம் ஸ்போர்ட்ஸ் கார்கள் உள்ளன.
ரக்ஷிதா மகாலட்சுமி:
விஜய் டிவியின் பிரபல சீரியல் நடிகையான ரக்ஷிதா மகாலட்சுமி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் சமீபத்தில் 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர காரை வாங்கிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.
ரேமா அசோக்:
சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக திகழும் ரேமாஅசோக் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் சமீபத்தில் 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கி இருந்தார்.
ஜித்தன் ரமேஷ்:
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவர் கார்கள் மீது தீராத காதல் கொண்டவர். நான்கு இருக்கைகள் கொண்ட 28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எஸ்யூவிஐ காரை இவர் வைத்துள்ளார். இவர் ஏற்கனவே பல விண்டேஜ் கார்களை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுனிதா கோகோய்:
விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சுனிதா. இவர் 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு எஸ்யூவி காரை வைத்துள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன்பு இந்த காரை வாங்கி எழுந்தது குறிப்பிடத்தக்கது.
மணிமேகலை:
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் விஜே மணிமேகலை. இவர் சுமார் 40 லிருந்து 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை சில மாதங்களுக்கு முன்பு வாங்கி இருந்த நிலையில் அதனை புகைப்படத்துடன் மகிழ்ச்சியாக இணையத்தில் பகிர்ந்திருந்தார்.
சிலம்பரசன்:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சிம்பு நடிப்பில் இறுதியாக வெளியான பத்து தல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் ஒரு ஸ்வாக்கி சூப்பர் பைக்கை வைத்துள்ளார். அடிக்கடி சாலை பயணம் செல்வதற்கு இவர் இந்த பைக்கை பயன்படுத்தி வரும் நிலையில் இதன் விலை சுமார் 40 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.