LATEST NEWS
“சுதந்திர தின விழா”… தேசபக்தியை இன்றும் நினைவூட்டும் தமிழ் திரைப்படங்கள்… சிறப்பு தொகுப்பு..!!

நாடு முழுவதும் இன்று 77வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர இந்தியாவில் இன்று ஆக்ஸிஜனமாக நாம் சுவாசிக்கின்ற தியாகங்களை அறிந்த மற்றும் அறியப்படாத அனைத்து சிறந்த மனிதர்களையும் பெண்களையும் நினைவு கூற வேண்டிய நாள் தான் இது. அதனைப் போலவே சுதந்திரத்திற்கான மாபெரும் போராட்டத்தை நமக்கு அடிக்கடி நினைவூட்டும் சில தமிழ் திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தியாக பூமி:
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்த போதும் சுதந்திர இயக்கம் உச்சத்தில் இருந்த போதும் இயக்குனர் கே சுப்பிரமணியம், தயாரிப்பாளர் எஸ் எஸ் வாசன் மற்றும் எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு தமிழ் திரைப்படம் எடுக்கும் தைரியம் இருந்தது. அவர்கள் எடுத்த இந்த தியாக பூமி திரைப்படம் 1939 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நிலையில் இந்த திரைப்படம் மகாத்மா காந்தியையும் அவரது கொள்கைகளையும் பெருமைப்படுத்தியது.
வீரபாண்டிய கட்டபொம்மன்:
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வீரபாண்டிய கட்டபொம்மன். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக முதலாவதாக குரல் கொடுத்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். அதனை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் 1959 ஆம் ஆண்டு வெளியானது.
கப்பலோட்டிய தமிழன்:
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அவர்களுக்கு எதிராக கப்பல் நிறுவனத்தை நடத்தி அதன் மூலம் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் தான் வ உ சிதம்பரம் பிள்ளை. இவரின் வாழ்க்கை வரலாற்றை கூறும் திரைப்படம் தான் கப்பலோட்டிய தமிழன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1961 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் தமிழ் சினிமாவின் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சிறந்த படங்களில் ஒன்றாக நிலைத்து நிற்கிறது.
ஹே ராம்:
கமல்ஹாசன் மற்றும் ஷாருக்கான் உள்ளிட்ட பல நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் சுதந்திரப் போராட்டத்தை அற்புதமாக மக்களுக்கு வெளிப்படுத்தியது. இந்த திரைப்படத்தை கமல்ஹாசனே எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்தார்.
ஜெய்ஹிந்த்:
நடிகர் அர்ஜுன் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளியான பிரம்மாண்ட திரைப்படம் தான் ஜெய்ஹிந்த். இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள் மற்றும் வசனங்கள் அனைத்தும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பாராட்டப்பட்டன. தேசபக்தி படமாக உருவான இந்த படம் தமிழ் சினிமாவில் இன்றும் தவிர்க்க முடியாத படமாக உள்ளது.
பாரதி:
பாடல்கள் மூலமாக இந்தியாவில் பலருக்கு சுதந்திர உணர்வை ஊட்டியவர் தான் பாரதியார். அவரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி 2000-ம் ஆண்டு பாரதி என்ற பெயரில் உருவான திரைப்படம் தான் இது.
இந்தியன்:
தேசபக்தி நிறைந்த முதியவர் மற்றும் யதார்த்த இளைஞர் என இரட்டை வேடத்தில் கமல்ஹாசன் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். ஊழல் மற்றும் லஞ்சம் ஆகியவற்றை தனி மூத்த குடிமகன் ஒருவர் ஒலிக்கும் நடவடிக்கையை கதையாகக் கொண்ட இந்த திரைப்படம் 1996 ஆம் ஆண்டு வெளியானது.
காமராஜ்:
மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்ட இந்த திரைப்படம் சுதந்திரத்திற்கு முந்தைய கட்டம். காமராஜரின் குழந்தை பருவத்தை அற்புதமாக சித்தரித்தது. இரண்டாவதாக காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றது மற்றும் மூன்றாவதாக அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது என இந்த திரைப்பட இந்தியாவில் நவீன வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டது.
காந்தி:
1982 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான வரலாற்று திரைப்படம் தான் காந்தி. இந்த திரைப்படம் எட்டு ஆஸ்கார் விருதுகளை பெற்றது.
துப்பாக்கி:
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி திரைப்படத்தில் ராணுவ அதிகாரியாக விஜய் நடித்திருந்தார். குறிப்பிட்ட நகரத்தை சீர்குலைக்க காத்திருக்கும் தீவிரவாதிகளை விஜய் ரகசியமாக கண்டுபிடிப்பது தான் இந்த திரைப்படத்தின் கதை.
மதராசபட்டினம்:
இயக்குனர் ஏஎல் விஜய்யின் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் 2010 ஆம் ஆண்டு வெளியான நிலையில் ஒரு பிரிட்டிஷ் பெண்ணுக்கும் டோபிக்கும் இடையேயான காதல் கதை என்றாலும் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 நள்ளிரவில் ஆர்யா இந்திய கொடியை ஏற்றிய போது அந்த அற்புதமான காட்சிக்கு இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.