LATEST NEWS
நடிகர் அசோக் செல்வனை மணக்கும் நடிகை கீர்த்தி பாண்டியனின்.. பலரும் பார்க்காத அன்சீன் மற்றும் குடும்ப புகைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர்தான் நடிகர் அசோக் செல்வன்.
இவர் நடித்த ஓ மை கடவுளே, போர் தொழில் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இவர் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் அசோக் செல்வனுக்கும் நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கீர்த்தி பாண்டியன் அன்பிற்கினியால் மற்றும் தும்பா என ஒரு சில திரைப்படங்களில் ஹீரோயினியாக நடித்துள்ளார்.
இவர் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியனின் மகள். இதனிடையே அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இடையே காதல் மலர்ந்ததற்கு முக்கிய காரணம் பா. ரஞ்சித் என தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது இவர் ப்ளூ ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை கீர்த்தி பாண்டியன் ஹீரோயினியாக நடிக்கின்றார்.
இந்தத் திரைப்படத்தின் சூட்டிங் நடைபெறும் போது தான் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அசோக் செல்வனுக்கும் கீர்த்தி பாண்டியனுக்கும் வருகின்ற செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது.
அதாவது இவர்களின் திருமணம் செப்டம்பர் 13ஆம் தேதி குடும்பத்தினர் முன்னிலையில் எளிமையாக நடைபெற உள்ளது.
அதனை தொடர்ந்து செப்டம்பர் 17ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கீர்த்தி பாண்டியனின் பலரும் பார்க்காத சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.