ஐஆர்எஸ் அதிகாரி சச்சின் சர்வானந்த் உடன் டேட்டிங்… விலை உயர்ந்த பரிசுகள்… வம்பில் சிக்கிய பிரபல நடிகை… – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஐஆர்எஸ் அதிகாரி சச்சின் சர்வானந்த் உடன் டேட்டிங்… விலை உயர்ந்த பரிசுகள்… வம்பில் சிக்கிய பிரபல நடிகை…

Published

on

இந்திய வருவாய் அதிகாரியான இருந்தவர் சச்சின் சாவந்த். இவர் 2011 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக இரண்டு கோடி 46 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்திருந்ததாக சிபிஐ இவர் மீது வழக்கு பதிவு செய்திருந்தார்கள். நவ்யா நாயர் மீது விசாரணை: இதனை அடுத்து இந்த வழக்கு அமலாக்கத்துறை இடம் சென்றது. மேலும், சட்டவிரோதமாக பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த ஜூன் மாதம் சச்சின் சாவந்த் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் வருவாய் துறை அதிகாரி சச்சின் சாவந்த்துடன் நடிகை நவ்யா நாயர் நெருங்கி பழகி இருந்தது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மலையாளத்தில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை நவ்யா நாயர்.  இவர் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், கன்னடம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

Advertisement

தமிழில் பிரசன்னாவுடன் அழகிய தீயே, சேரன் நடிப்பில் வெளிவந்த ராமன் தேடிய சீதை, ஆடும் கூத்து, ரசிக்கும் சீமானே போன்ற பல படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும், இவருக்கு தமிழில் பெரிய அளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இவருடைய சிறந்த நடிப்புக்காக கேரள மாநில திரைப்பட விருதை இரண்டு முறையும், கலைமாமணி விருதையும் வாங்கி இருக்கிறார்.

இந்நிலையில் சச்சின் சாவந்த் கிட்டதட்ட 10 முறைக்கு மேல் கொச்சினுக்கு சென்று நவ்யா நாயரை சந்தித்து இருக்கிறார். மேலும் அவருக்கு நகை, விலை உயர்ந்த பொருட்களையும் பரிசாக கொடுத்திருக்கிறார்.இதுகுறித்து அவரிடம் கேட்டபோது ‘சச்சின் சாவந்த் எனக்கு நண்பர் மட்டும் தான். வேறு எந்த உறவும் எங்களுக்குள் இல்லை என்று கூறியிருக்கிறார். விசாரணையில் இருக்கும் வருவாய்த்துறை அதிகாரியுடன் நவ்யா நாயர் டேட்டிங் செய்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in