‘தளபதி 68’-ல் சிம்ரனும் இல்ல, ஜோதிகாவும் இல்ல… கமிட்டான பிரபல நடிகை யார் தெரியுமா?… குஷியில் ரசிகர்கள்… - cinefeeds
Connect with us

LATEST NEWS

‘தளபதி 68’-ல் சிம்ரனும் இல்ல, ஜோதிகாவும் இல்ல… கமிட்டான பிரபல நடிகை யார் தெரியுமா?… குஷியில் ரசிகர்கள்…

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கம் தளபதி 68 திரைப்படத்தின் விஜய் நடிக்க உள்ளார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படதில் விஜய் – வெங்கட் பிரபு – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைகின்றனர். இந்த திரைப்படத்தின் பூஜை செப்டம்பர் மாதம் நடைபெறும் எனவும் அக்டோபர் முதல் வாரத்தில் விஜய் படப்பிடிப்பின் கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.  இதுவரை டபுள் ஆக்ஷனில் யாரும் செய்திடாத பல புதிய முயற்சிகளை எடுப்பதற்கு வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார்.

Advertisement

தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தளபதி 68 வேலைகள் தொடங்கியுள்ளன. அதன்படி விஜய், வெங்கட் பிரபு மற்றும் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் சவுதர் கலிபோர்னியா இன்ஸ்டியூட்டா ஃபார் க்ரியேட்டிவ் டெக்னாலஜி சென்டரை பயன்படுத்தவுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும் ஏற்கனவே வெளியானது.

இந்த படத்தில் விஜய் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும், எனவே, இரண்டு கதாநாயகிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில், அப்பா விஜய்க்கு ஜோதிகாவும், மகன் விஜய்க்கு பிரியங்கா மோகனும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால், இப்படத்திலிருந்து ஜோதிகா விலகிவிட்டார். எனவே, சிம்ரனை நடிக்கவைக்க முயற்சிகள் செய்யப்பட்டது. ஆனால், அவரும் தற்பொழுது நடிக்கவில்லை. எனவே, சிரிப்பழகி சினேகாவிடம் படக்குழு பேசி வருகிறார்களாம்.

Advertisement

Continue Reading
Advertisement