CINEMA
மொத்த அனிமே உலகமுமே டோக்கியோவில்…!பிளாக் பாந்தர் நடிகருடன் ராஷ்மிகா… ஜப்பானில் அனிமேஷன் விருது வென்ற ‘சோலோ லெவலிங்’…!
சோனி நிறுவனத்தின் முன்னணி அனிமே (Anime) ஸ்ட்ரீமிங் தளமான கிரன்சிரோல் (Crunchyroll) ஆண்டுதோறும் சர்வதேச அளவில் அனிமே விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், 10-வது சர்வதேச அனிமே விருதுகள் 2026 விழா நேற்று (மே 23ஆம் தேதி) ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. உலகெங்கிலும் உள்ள அனிமே ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த இந்த விழாவில், இந்தியாவின் முன்னணி நட்சத்திரமான நடிகை ராஷ்மிகா மந்தனா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்த சர்வதேச மேடையில், ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ‘பிளாக் பாந்தர்’ பட நடிகர் வின்ஸ்டன் டியூக் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா மேடையேறினார். இவர்கள் இருவரும் இணைந்து இந்த ஆண்டின் மிக உயரிய விருதான ‘சிறந்த அனிமேஷன்’ (Best Animation) விருதை அனிமே உலகிற்கு வழங்கினர். இந்த 2026-ஆம் ஆண்டிற்கான சிறந்த அனிமேஷன் விருதை, உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சோலோ லெவலிங் சீசன் 2: அரைஸ் பிரம் தி ஷேடோ’ அனிமே தொடர் தட்டிச்சென்றது.
சர்வதேச அளவில் மிகவும் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் இந்த அனிமே விருதுகள் மேடையில், இந்தியப் பிரதிநிதியாக நடிகை ராஷ்மிகா மந்தனா பங்கேற்று விருது வழங்கியது ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கே கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகவும் கௌரவமாகவும் பார்க்கப்படுகிறது. அனிமே கலாச்சாரம் இந்தியாவிலும் வேகமாக வளர்ந்து வரும் வேளையில், ராஷ்மிகாவின் இந்த உலகளாவிய பங்களிப்பு இந்திய அனிமே ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
