“என்னது… 3 மணி நேர கிளாஸுக்கு ரூ.8.5 லட்சமா…?!” அமெரிக்காவின் கல்விச் செலவு குறித்து இந்தியப் பெண் பகிர்ந்த அதிர்ச்சித் தகவல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்னது… 3 மணி நேர கிளாஸுக்கு ரூ.8.5 லட்சமா…?!” அமெரிக்காவின் கல்விச் செலவு குறித்து இந்தியப் பெண் பகிர்ந்த அதிர்ச்சித் தகவல்..!!

Published

on

அமெரிக்காவில் வசிக்கும் சோனல் சௌத்ரி என்ற இந்திய கன்டென்ட் கிரியேட்டர், தனது இரண்டு வயது மகளுக்கு ப்ரீஸ்கூல் சேர்க்கைக்காக அங்குள்ள கட்டண விவரங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அவர் ஒரு தனியார் ப்ரீஸ்கூலுக்குச் சென்று வகுப்பறைகள், ஆசிரியர்களின் கற்பித்தல் முறை மற்றும் பிற வசதிகளைப் பார்வையிட்டபோது, அங்குள்ள கட்டணத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவித்துள்ளார். இந்திய மதிப்பில் பல லட்சம் ரூபாய் செலவிட வேண்டியிருப்பது பலருக்கு வியப்பை ஏற்படுத்தினாலும், ஆரம்பத்தில் சோனலுக்கும் இது பெரும் அதிர்ச்சியாகவே இருந்துள்ளது.

அந்த பள்ளியில் வகுப்பறைகளின் சூழல் குறித்துப் பேசிய சோனல், ஒவ்வொரு 8 குழந்தைகளுக்கும் 2 ஆசிரியர்கள் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். குழந்தைகள் வெறும் புத்தகப் படிப்போடு நிறுத்தப்படாமல் இசை, யோகா, படைப்பாற்றல் பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகள் மூலம் வழிநடத்தப்படுகின்றனர். கட்டணத்தைப் பொறுத்தவரை, ஒரு குழந்தை வாரத்திற்கு 2 நாட்கள் மட்டும் சென்றால் ஆண்டுக் கட்டணம் சுமார் 4,000 டாலர் அதாவது ஏறத்தாழ ரூ. 3.8 லட்சம் ; அதுவே வாரத்திற்கு 5 நாட்களும் சென்றால் ஆண்டுக் கட்டணம் 9,000 டாலர் அதாவது ஏறத்தாழ ரூ. 8.5 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. மேலும், வகுப்புகள் தினமும் காலை 8:45 மணி முதல் 11:45 மணி வரை என தினமும் 3 மணி நேரம் மட்டுமே நடைபெறுகின்றன.

Advertisement

https://www.instagram.com/reel/DbpB5w7BBUf/?utm_source=ig_web_button_share_sheet

முதலில் கட்டணம் அதிகமாகத் தெரிந்தாலும், ஆசிரியர்களின் கவனம், பாதுகாப்பு, அமெரிக்காவின் சராசரி வருமானம் மற்றும் அங்குள்ள வசதிகளைக் கணக்கிடும் போது இந்தச் செலவு நியாயமானதுதான் என்று சோனல் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்காவில் கிண்டர்கார்டன் முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் இலவசக் கல்வி வழங்கப்படுவதால், ப்ரீஸ்கூல் கட்டணத்தை முழு கல்வி முறைக்கான செலவாகப் பார்க்கக் கூடாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, குழந்தைகளுக்கான நல்ல கல்விச் சூழலுக்கு இந்தக் கட்டணம் சரிதான் என சிலரும், அமெரிக்கக் கட்டணத்தை அப்படியே இந்திய ரூபாயில் மாற்றிப் பார்த்து ஒப்பீடு செய்யக் கூடாது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in