LATEST NEWS
வைகோவை ஓரங்கட்டும் தவெக…? கூட்டணி ஒருங்கிணைப்பாளர் லிஸ்டில் அந்த 2 பேர்… கடும் வருத்தத்தில் மதிமுக…!!
தமிழக வெற்றிக் கழகத் தலைமையிலான ஆளும் தோழமைக் கட்சிகளின் கூட்டணி விவகாரத்தில், புதிய ஒருங்கிணைப்பாளரை நியமிப்பது குறித்த தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரவி வருகின்றன. தவெக அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் முன்னெடுத்த ஆலோசனைகளைத் தொடர்ந்து, இந்தக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் அல்லது விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் எனப் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. சென்னை பனையூரில் நடைபெறும் கூட்டத்தில் மதிமுக, விசிக, மற்றும் IUML ஆகிய கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் இந்த அமைப்புக் குழுவில் உறுப்பினர்களாக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில், இந்தக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை மிகவும் எதிர்பார்த்திருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு, இந்த உத்தேசப் பட்டியல் ஏமாற்றத்தையும் ஏக வருத்தத்தையும் அளித்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், தேசிய மற்றும் மாநில அளவில் சமயச் சார்பற்ற தன்மையையும் சமூக நீதியையும் பாதுகாக்கும் விதமாக, மதச்சார்பற்ற, சமூகநீதி ஆகிய கொள்கை வார்த்தைகளை உள்ளடக்கிய ஒரு புதிய பெயர், முறைப்படியான கூட்டணிக் கூட்டத்திற்குப் பின் இறுதி செய்யப்பட உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
