“மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்ல” தவெக எம்.எல்.ஏ-வின் ஆபாச குறுஞ்செய்தி சர்ச்சை… தவெக அரசை வறுத்தெடுத்த திமுக கனிமொழி எம்பி..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்ல” தவெக எம்.எல்.ஏ-வின் ஆபாச குறுஞ்செய்தி சர்ச்சை… தவெக அரசை வறுத்தெடுத்த திமுக கனிமொழி எம்பி..!!!

Published

on

கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக வெளியான தகவலை முன்வைத்து, தவெக அரசு மற்றும் முதல்வர் விஜய்யை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடுமையாக விமரிசித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாகத் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தவெக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்திற்கே சென்று தொந்தரவு செய்ததாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வருவதைக் கனிமொழி சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஒரு மாவட்டத்தின் உயர் அதிகாரியான ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இந்தத் திறனற்ற தவெக ஆட்சியில் நிலவுவதாகவும், தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம் மட்டும் தலைமைச் செயலாளர் ஆட்சியருக்கு என்ன பாதுகாப்பைக் கொடுத்துவிட முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

இருப்பினும், தன் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளைத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் முற்றிலும் மறுத்துள்ளார். மாவட்டத்தின் உயர் அதிகாரியிடம் தவறான கண்ணோட்டத்தில் நடக்க வேண்டிய அவசியம் தனக்கில்லை என்றும், முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையக் கட்டுமானத்தில் நடந்த முறைகேடுகளைத் தான் தட்டிக்கேட்டுச் சரிசெய்து வருவதால், தவெக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த திமுக ஐடி விங் (IT Wing) மூலம் திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய்யான தகவல் இது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in