CINEMA
“ஆடையைக் கலைந்து, முடியைக் கத்தரித்து…” கழிவறையில் வைத்து சக மாணவிக்கு மாணவிகள் குழு கொடுத்த கொடூர சித்திரவதை.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் உள்ள ஒரு பயிற்சி மையத்தின் கழிவறையில், ஒரு சில மாணவிகள் சேர்ந்து மற்றொரு மாணவியைக் கொடூரமாகத் தாக்கி, அவரது ஆடைகளைக் கலைந்து, முடியைக் கத்தரித்துச் சித்திரவதை செய்துள்ள கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த மூடிய அறைக்குள் பாதிக்கப்பட்ட மாணவியைத் தனியாகக்Corner செய்த அந்த மாணவிகள் குழு, அவரை அநாகரிகமான முறையில் அவமானப்படுத்தியதோடு மட்டுமில்லாமல், அந்த ஒட்டுமொத்தக் கொடூரச் சம்பவத்தையும் தங்களது மொபைல் போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். அந்தத் தருணத்தில் பாதிக்கப்பட்ட அந்தப் பிஞ்சு உளம் எந்தளவுக்குக் கடுமையான மன உளைச்சலுக்கும் பயத்திற்கும் ஆளாகியிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது என்று பலரும் சமூக ஊடகங்களில் தங்களது கண்டனக் குரல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
ஒரு பெண்ணுக்குப் பெண்ணே இழைத்த இந்த மனிதாபிமானமற்ற கொடூரச் செயலில் ஈடுபட்ட மாணவிகளை வெறும் பள்ளியிலிருந்தோ அல்லது பயிற்சி மையத்திலிருந்தோ இடைநீக்கம் செய்வதோடு மட்டும் இந்த விவகாரத்தை விட்டுவிடக் கூடாது என்று பொதுமக்கள் ஆவேசமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்ற கொடூர எண்ணம் கொண்டவர்கள் மீது அவர்கள் செய்த குற்றத்திற்கு ஏற்ப மிகக் கடுமையான சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், அப்போதுதான் எதிர்காலத்தில் எவரொருவரும் இது போன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவதற்கு முன்னால் நூறு முறை யோசிப்பார்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தற்போது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
