LATEST NEWS
சாண்டிக்கு பிறகு எனக்கு இன்னொரு காதல் இருந்தது?…. ஆனால்…. நீண்ட கால உண்மையை போட்டு உடைத்த காஜல் பசுபதி….!!!!
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக தனது சினிமா பயணத்தை தொடங்கினார் காஜல் பசுபதி. அதனால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இவர் முதலில் வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் தோழியாக படம் முழுவதும் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த இவர் நடன இயக்குனர் சாண்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் சில காலம் மட்டுமே ஒன்றாக சேர்ந்து வந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இருவரின் விவாகரத்திற்கு பிறகு சாண்டி வேறொரு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு மகளும் இருக்கின்றனர். ஆனால் சாண்டியை திரிந்த காஜல் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருக்கிறார். அது மட்டுமல்லாமல் விவாகரத்திற்கு பின்னரும் சாண்டி மற்றும் அவரின் குடும்பத்துடன் நல்ல தோழியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் சாண்டி பற்றி சில உண்மைகளை காஜல் வெளிப்படையாக கூறியுள்ளார். சாண்டி தற்போது என்னுடன் நெருக்கமான நண்பராக இருக்கின்றார். இவரை காதலித்த பிறகு மற்றொருவரை நான் காதலித்தேன். திருமணம் வரை சென்ற அந்த காதல் ஒரு பிரச்சனை காரணமாக என் மேல் தப்பு சொல்லியதால் அது செட்டாகாது என்று தனிமையில் நான் வாழ்ந்து வருகிறேன். சாண்டியின் மகள் லாலா என்னை மறந்து விட்டாள்.
நான் இன்னும் சாண்டியை நினைத்துக் கொண்டிருக்கிறேன் என யாரும் நினைக்க வேண்டாம். சாண்டி என்னை ஆன்ட்டி என்று தனது மகளிடம் கூறியவுடன் நான் கோபப்பட்டு அக்கான்னு கூப்பிட சொன்னேன் என காஜல் பசுபதி வெளிப்படையாக தனது வாழ்க்கை குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து உள்ளார். அது மட்டுமல்லாமல் சாண்டி குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் உள்ளிட்ட புகைப்படம் பார்த்து அசிங்கமாக கமெண்ட் செய்பவர்களை நான் பிளாக் செய்து விடுவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
