LATEST NEWS
விவாகரத்து பெற்று 47 வயதில் குழந்தை பெற்ற 80ஸ் நடிகை ரேவதி…. குழந்தையுடன் வைரலாகும் க்யூட் புகைப்படம்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரேவதி. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல் மற்றும் ரஜினி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரின் நடிப்பில் வெளியான தேவர் மகன், புன்னகை மன்னன் உள்ளிட்ட திரைப்படங்கள் இன்றும் பலரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்துள்ளது. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கலக்கி வந்த நடிகை ரேவதி பிரபல நடிகர் சுரேஷ் சந்திரா மேனனை 1986 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 27 வருடங்கள் ஒன்றாக இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். அதன் பிறகு நடிகை ரேவதி கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து 2018 ஆம் ஆண்டு தனக்கு ஐந்து வயதில்ஹீ என்ற ஒரு பெண் குழந்தை இருப்பதாக திடீரென கூறினார்.
இவர் திடீரென அறிவித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விளக்கமளித்த அவர், நான் டெஸ்ட் டியூப் வழியாக கருவுற்றேன். அதன் பிறகு நான் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தேன். ஆனால் பலரும் இவரை நான் தத்து எடுத்த பிள்ளை என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அது தவறு நான் பெற்றெடுத்த குழந்தை தான் இவள் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.இந்நிலையில் ரேவதி தனது மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
